Connect with us

இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவியை செய்யும் பாலா!! லொள்ளு சபா நடிகரின் வீடியோவை கண்ட அடுத்த நொடியே நேரில் சென்று உதவிய பாலா!!

kpy bala venkat raja 1

Actress Gallery

இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவியை செய்யும் பாலா!! லொள்ளு சபா நடிகரின் வீடியோவை கண்ட அடுத்த நொடியே நேரில் சென்று உதவிய பாலா!!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதன் பிறகு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார் பாலா.

KPY Bala4

பாலா சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே பல்வேறு மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அவருக்கு வரும் வருமானத்தில் எல்லாம் நலிவடைந்த ஏழை மக்களுக்கும் அநாதை குழந்தைகளுக்கும் நிறைய உதவிகளை செய்து வருகிறார். இவரது உதவும் மனபான்மையை பார்த்து நடிகர் லாரன்ஸ் கூட இவருக்கு நன்கொடை வழங்கியிருந்தார்.

KPY Bala3

எனவே நடிப்பு துறையில் உள்ள பலரும் கூட இவரிடம் உதவிகள் கேட்டு வருகின்றனர். விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சி பலரை தூக்கிவிட்டுள்ளது. பலருக்கு சினிமா வாய்ப்பை பெற்று தந்துள்ளது. நடிகர் சந்தானம், மனோகர் போன்ற பலரும் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக சினிமாவிற்கு வந்தவர்கள்தான். அதே லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமாக இருந்த மற்றொரு நடிகர் வெங்கட் ராஜ். மற்ற லொள்ளு சபா நடிகர்களை போல இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் அதிகமாக பிரபலமாகமல் இருந்தார்.

KPY Bala2

அவர் பேசும்போது கடந்த சில காலங்களாக மூச்சு திணறல் காரணமாக கடும் அவதிகளை சந்தித்து வருகிறேன். மருந்து வாங்க கூட காசு இல்லை. யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இதை அறிந்த பாலா உடனடியாக அவரை சந்தித்து அவருக்கு 9000 ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். மேலும் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்புக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

KPY Bala1

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top