Connect with us

பள்ளி விடுமுறை நாளிலும் வெளியே சென்ற விஜய் ஆண்டனி மகள் மீரா!! விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் வெளியான உண்மை தகவல்!!

Vijay Antony 2

Cinema News

பள்ளி விடுமுறை நாளிலும் வெளியே சென்ற விஜய் ஆண்டனி மகள் மீரா!! விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் வெளியான உண்மை தகவல்!!

தற்கொலைக்கு முன் விஜய் ஆண்டனியின் மகள் மீரா செல்போனில் யாரிடம் பேசினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தற்போது கோலிவுட்டில் பிஸியான நடிகராக நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

800full vijay antony

இதையடுத்து அவர் நடித்துள்ள ரத்தம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தை விஜய் ஆண்டனி ரிலீஸ் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை 3 மணியளவில் விஜய் ஆண்டனி தனது மகளின் அறைக்கு சென்று பார்த்தபோது, ​​அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

vijay antony 1332023m1

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய் ஆண்டனி, மீராவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், இதற்கான உண்மையான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vijay Antonys wife Fathima and daughter

இது ஒரு பக்கம் இருக்க நேற்று பள்ளி விடுமுறை என்றாலும் கூட விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை கிளப்பி இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து விசாரித்த போது நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற மீரா தன்னுடைய தோழிகளை சந்தித்தார் என்று கூறப்படுகிறது.

Vijay Antony 1

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top