Connect with us

2வது முறையாக கர்ப்பமான சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்!! வெளியான வளைகாப்பு விழா புகைப்படங்கள்!!

Gayathri Yuvaraj

Cinema News

2வது முறையாக கர்ப்பமான சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்!! வெளியான வளைகாப்பு விழா புகைப்படங்கள்!!

பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ், தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். சின்ன வயசுல இருந்தே நடிகை ஆகணும்னு ஆசைப்பட்ட காயத்ரி, அதற்காக தன்னை தயார்படுத்திக்கிட்டார். கல்லூரியில் படிக்கும்போதே பல ஆடிஷன்களில் கலந்து கொண்டு தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

Gayathri1

போதிய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடன திறமையால் ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு சின்னத்திரை வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

Gayathri2

இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நிலாவாக அறிமுகமானார். வசீகரமான முகத்தாலும், அழகான நடிப்பாலும் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த காயத்ரிக்கு பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடன கலைஞர் யுவராஜை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகன் உள்ளார்.

Gayathri3

காயத்ரி தனது மகனுடன் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களும் இணையத்தில் பிரபலமாக உள்ளன. இந்நிலையில் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கணவர் யுவராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். “அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.. ஆம் நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம்.. உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் வேண்டும்.. 5 மாதங்கள்.. நாட்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.. ஓ இதைத்தான் பேரின்பம் என்று அழைக்கப்படுகிறது? முழுமையாக உணர்கிறேன்” என்று தலைப்பிட்டுள்ளார்.

Gayathri4

Gayathri5

Gayathri6

Gayathri7

Gayathri8

Gayathri9

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top