Connect with us

பல்வேறு தளபதி மற்றும் தல படங்களின் பாடல்களில் அடிக்கடி நடனமாடும் ஜப்பான் குமாரின் சமீபத்திய போட்டோக்கள் வைரல்!!

Japan Kumar

Cinema News

பல்வேறு தளபதி மற்றும் தல படங்களின் பாடல்களில் அடிக்கடி நடனமாடும் ஜப்பான் குமாரின் சமீபத்திய போட்டோக்கள் வைரல்!!

ஜப்பான் குமாரை நீங்கள் பல்வேறு பாடல்களில் பார்த்திருக்க வாய்ப்புண்டு. இவர் நடன கலைஞர்களான பிரபு தேவா மற்றும் அவரின் தம்பி ராஜு சுந்தரம் உடன் அவர்களது குழுவில் நடன கலைஞராக இருந்து வருகிறார்.

Japan Kumar7

90 மற்றும் 2000-ம் ஆண்டு காலகட்டங்களில் வந்த தல தளபதி மற்றும் இதர நடிகர்கள் பாடல்களில் இவரை அடிக்கடி பார்க்க முடியும். ஏனென்றால் இவருக்காகவே தனியாக ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இவர் காமெடியாக அல்லது மெயின் நடிகர்களோடு டான்ஸ் ஆடிவிட்டு செல்வார். அப்படி பிரபலமடைந்தவர் தான் இந்த ஜப்பான் குமார்.

Japan Kumar Meme

இவர் சமீபகாலமாகவே படங்களிலும் நடித்து வருகிறார் மற்றும் அவ்வப்போது பெரிய ஹீரோ பாடல்களில் நடனமாடுவர். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில், வாத்தி கம்மிங் என்ற பாடலில் இவர் ஒரு காட்சிக்கு மட்டும் வந்து செல்லுவார். அப்படி இவருக்கென்ன ஒரு தனி செல்வாக்கு உள்ளது.

Japan Kumar1

கூர்க்கா மற்றும் சாமி திரைப்படங்களில் இவர் காமெடி வேடத்தில் நடித்திருந்தார். இவருக்கென சினிமா துறையில் ஒரு மவுஸ் இருந்தாலும் எளிமையான வாழ்க்கைமுறையை வாழ்ந்து வருகிறார். அவரது இன்ஸ்டாகிராமில் இருந்து அவருடைய சமீபத்திய போட்டோக்களை எடுத்து இங்கே பதிவேற்றியுள்ளோம். அந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு. இவர் மீண்டும் பல்வேறு பாடல்களில் மற்றும் படங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Japan Kumar2

Japan Kumar3

Japan Kumar4

Japan Kumar5

Japan Kumar6

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top