Connect with us

இது ஒரு படமே இல்ல!! மாமன்னன் படம் பார்த்து மாரி செல்வராஜை விமர்சித்த நடிகர் சிவகுமார்!!

sivakumar

Cinema News

இது ஒரு படமே இல்ல!! மாமன்னன் படம் பார்த்து மாரி செல்வராஜை விமர்சித்த நடிகர் சிவகுமார்!!

மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் மாமன்னன் பல சர்ச்சை தாண்டி படம் ரிலீஸ் ஆகி தற்போது நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முன் அவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள்,கர்ணன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

Mari Maamannan

அதேபோல் தான் தற்போது மாமன்னன் திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது.கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.65 கோடி வசூலித்த சாதனை படைத்த நிலையில் இப்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது அதிலும் பலரால் பார்க்கப்பட்டு வருகிறது. ஓடிடியில் வெளியான பின்னர் இப்படத்திற்கு உலகளவில் மவுசு வந்துள்ளது.

filmcompanion 2023 05 80cb9e60 a2e2 48bf b8df b9784694cce1 qr

இப்படத்தை வெளியிட்டுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் நேற்று ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தது அதன்படி மாமன்னன் திரைப்படம் உலகளவில் அதிகம் பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் 9 இடத்திலும் இந்தியாவில் நம்பர் 1 இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது…இப்படி ஒரு சாதனையையும் அது படைத்தது இருந்தது. அதுமட்டுமின்றி மாமன்னன் படத்தை ஓடிடியில் பார்த்த ஏராளமான திரைப் பிரபலங்களும் அப்படத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

Maamannan

தற்போது சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் அப்படம் பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜை புகழ்ந்து தள்ளி உள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பிய பதிவில் தம்பி மாரி செல்வராஜுக்கு மாமன்னன் திரைப்படம் பார்த்தேன்.இது படமில்லை…உங்கள் வாழ்க்கையில் கண்ட வலி பாதிக்கப்பட்டவன் தான் இவ்வளவு ஆழமாகச் சொல்ல முடியும். திரைப்படம் மூலம் இன்னும் நீங்கள் சொல்ல வேண்டிய செய்தி நிறைய உள்ளது.உங்களையும் வடிவேலுவையும் சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன்.விரைவில் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்…இதை அவர் ஷேர் செய்துளளர் அது வைரலாக பேசப்பட்டு வருகிறது…சர்ச்சைகள் வந்தாலும் பேசப்படுகிறதே என சொல்லி அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News

To Top